திருப்பூர் மாவட்ட, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித்திட்டம் சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டி நடந்தது.
அவிநாசி ஒன்றிய அளவிலான போட்டி, அவிநாசி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஜான் வில்சன் என்ற மாணவன், தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
காது கேளாத, வாய் பேச முடியாத அவர், 50 மீ., ஓட்டத்தில் முதலிடம், பந்து எறிதலில், இரண்டாமிடம், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவனை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.