நீர்வரத்து கால்வாயில் குப்பை தேக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வரத்து கால்வாயில் குப்பை தேக்கம்

Added : டிச 05, 2019

ஊத்துக்கோட்டை:ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாயை ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்பில் சீர்படுத்தும்போது, குப்பையை அகற்றாமல் விட்டதில், மீண்டும், கழிவுகள் சேரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.ஆந்திர மாநிலம், சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து, விவசாய தேவைக்காக, ஊத்துக்கோட்டை ஏரிக்கு தண்ணீர் செல்லும் நீர்வரத்துக் கால்வாய் உள்ளது.தமிழக பகுதியில், 2 கி.மீட்டர் துாரமுள்ள ஊத்துக்கோட்டை ஏரிக்கு, செல்லும் கால்வாயின் இரண்டு பக்கமும் குடியிருப்புவாசிகள் வசிக்கின்றனர்.ஆந்திராவின் தாசுகுப்பம் பகுதியில் இருந்து, இறைச்சி கழிவுகள் இந்த கால்வாயில் கொட்டுவதால், குப்பை மற்றும் சேறும், சகதியுமாக இருந்தது.இதனால் துர்நாற்றம் வீசி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும், ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது.ஊத்துக்கோட்டை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய், கடந்த மாதம், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடந்தது.பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் சீரமைக்கும் போது, கால்வாயில் இருந்த கழிவுகளை அகற்றாமல் அதை அப்படியே கரையில் போட்டு விட்டனர்.நான்கு நாட்களில் கால்வாய் சீரமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து முடிந்து விட்டது.குப்பையை அகற்றாமல் விட்டதால், அங்கு துர்நாற்றம் வீசுகிறது. தற்போது, பெய்த மழையில் கரையில் இருக்கும் குப்பை, மீண்டும் கால்வாய்க்குள் சேர்ந்ததால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுருட்டப்பள்ளியில் இருந்து, ஊத்துக்கோட்டை ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாயில் உள்ள குப்பையை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X