அனுமதி இன்றி பன்றி பண்ணை முறைகேடாக மின் இணைப்பு: பொதுமக்கள் புகாரால் அம்பலம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
அவிநாசி:சேவூர், தத்தனுார் ஊராட்சிக்குட்பட்ட, வெள்ளமடையில் குடியிருப்புவாசிகள், நேற்று, அவிநாசி பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு வழங்கினர்.அதில், 'வெள்ளமடை பகுதியில், ஒருவர், வெண்பன்றி பண்ணை நடத்தி வருகிறார். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், வெள்ளமடை, கொளத்துப்பாளையம், அப்பநாயக்கன்பாளையம், கவுண்டாய்புதுார், பாப்பநாயக்கம்பாளையம் பகுதிகளில் வசிக்கும் மக்கள்

அவிநாசி:சேவூர், தத்தனுார் ஊராட்சிக்குட்பட்ட, வெள்ளமடையில் குடியிருப்புவாசிகள், நேற்று, அவிநாசி பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு வழங்கினர்.

அதில், 'வெள்ளமடை பகுதியில், ஒருவர், வெண்பன்றி பண்ணை நடத்தி வருகிறார். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், வெள்ளமடை, கொளத்துப்பாளையம், அப்பநாயக்கன்பாளையம், கவுண்டாய்புதுார், பாப்பநாயக்கம்பாளையம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கின்றனர்.

குழந்தைகள், வயதானவர்களுக்கு, பல்வேறு உடல் உபாதை ஏற்படுகிறது. பன்றிக்கழிவுகள், அருகேயுள்ள நீரோடை புறம்போக்கில் கொட்டப்படுகின்றன. பன்றிப்பண்ணை அருகே, மலைக்கருப்பராயன் கோவில் உள்ளது; பண்ணையில் இருந்து வரும் துர்நாற்றம், பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது;வெள்ளமடை பகுதியில் பன்றி பண்ணை வைக்க, சம்பந்தப்பட்ட நபர் எவ்வித அனுமதியும் பெறவில்லை. விதிப்படி, வணிக நோக்கில், பன்றி பண்ணை வைப்போர், குடியிருப்பு பகுதியில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் தான் வைக்க வேண்டும்.வணிக நோக்கில், பண்ணை வைக்கும் போது, ஊராட்சி நிர்வாகம், சுகாதாரப் பிரிவினரின் அனுமதிபெற வேண்டும்.

ஆனால், பண்ணை உரிமையாளர் எவ்வித அனுமதியும் பெறவில்லை. அவரது பண்ணைக்கு அருகேயுள்ள விவசாய நிலத்தில் இருந்து முறைகேடாக மின் இணைப்பு எடுக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. உரிய கள ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X