பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை பிரித்து கொடுக்கும் வீடுகளுக்கு பரிசு

Added : டிச 05, 2019
Share
Advertisement
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், வீடு வீடாக குப்பை சேகரிக்க வரும் தொழிலாளர்களிடம், குப்பையை பிரித்து கொடுக்கும் வீடுகளுக்கு, பரிசுகள் வழங்கப்படும் என, நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். தற்போது, நகராட்சி நிர்வாகம், மக்கும், மக்கா குப்பை மற்றும் பிளாஸ்டிக் என, தனித்தனியாக

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், வீடு வீடாக குப்பை சேகரிக்க வரும் தொழிலாளர்களிடம், குப்பையை பிரித்து கொடுக்கும் வீடுகளுக்கு, பரிசுகள் வழங்கப்படும் என, நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். தற்போது, நகராட்சி நிர்வாகம், மக்கும், மக்கா குப்பை மற்றும் பிளாஸ்டிக் என, தனித்தனியாக பிரித்து வாங்குகிறது. சிலர் குப்பையை தெருவில் கொட்டி விடுகின்றனர்.இது குறித்து, ஆணையர் கா.ராஜலட்சுமி கூறியதாவது:நகராட்சியில், 21 வார்டுகளில், தற்போது, ஒன்பது வார்டுகளில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள், தள்ளுவண்டியில் வீடு வீடாக சென்று, குப்பை சேகரித்து வருகின்றனர்.பெரும்பாலான வீடுகளில், குப்பை, பிளாஸ்டிக் கவர் என, தனித்தனியாக பிரித்து கொடுப்பதில்லை. இனிவரும் நாட்களில், வீடுகளில் குடியிருப்பவர்கள், துப்புரவு ஊழியர்களிடம் குப்பையை பிரித்து கொடுத்தால் பரிசுகள் வழங்கப்படும்.மாறாக குப்பையை பிரித்து கொடுக்காதவர்களுக்கும், தெருவில் குப்பை போடுபவர்களுக்கும், அபராதம் விதிக்கப்படும்.அதே போல், திருமண மண்டப உணவு கழிவுகள் மற்றும் குப்பையை பிரித்து, உரிய கட்டணம் செலுத்தினால், நகராட்சி நிர்வாகம், வாகனங்களை அந்த திருமண மண்டபத்திற்கு நேரில் அனுப்பி, குப்பை கொண்டு செல்லும். தெரு அல்லது சாலையில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X