திருப்பூர்:திருப்பூரில் சட்ட விரோதமாக மது விற்ற 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 136 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
திருப்பூர் மதுவிலக்கு போலீசார், எம்.எஸ்., நகர், வீரபாண்டி,பொன் கோவில் நகர் உள்ளிட்ட இடங்களில் ரோந்து மேற்கொண்டனர்.'டாஸ்மாக்' மதுக்கடை பார் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது தெரிந்தது.இதுதொடர்பாக, சேவுகபெருமாள், 22, சத்யராஜ், 32, முத்துகுமார், 37, ரமேஷ், 36, அரவிந்த், 24 மற்றும் திருப்பதி, 26 ஆகியோரை கைது செய்து, 136 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.