சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவன் மர்மச்சாவு

Added : டிச 05, 2019
Advertisement

நகரி:சித்துார் மாவட்டம், ஏகாம்பரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு மகன் சுரேஷ், 18. இவர், நகரி பகுதியில் உள்ள இளநிலை கல்லுாரி ஒன்றில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த, 20 நாட்களுக்கு முன், சுரேஷ் வீட்டிலிருந்து வெளியே செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். சுரேஷ் வீட்டிற்கு திரும்பாததால், அவரது பெற்றோர், நகரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், நகரி அடுத்த, காக்கவேடு மலை அருகே உள்ள குட்டையில், இளைஞர் இறந்து மிதப்பதாக, அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதை தொடர்ந்து, நகரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிணத்தை மீட்டு விசாரித்த போது, காணாமல் போன சுரேஷ் என்பது தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X