திருப்பூர்:திருப்பூர், ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'பெண்கள் பாதுகாப்பும், கல்வியும்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா தலைமை வகித்தார். பள்ளியில் பயிலும், பிளஸ்1 மாணவியர், ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்றனர். திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் அனுராதா பேசுகையில், ''ஒரு பெண் குழந்தை படித்தால் போதும். அக்குடும்பமே வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும்.
பிளஸ் 2 வரை படித்ததும் பல மாணவிகள் கல்வியை நிறுத்திவிடுகின்றனர். இது முற்றிலும் தவறு. கல்வியை தொடர வேண்டும். அதிகாரப்பதவியில் பெண்கள் தங்களை நிறுத்த வேண்டும். அதுவே பெண்களுக்கான சரியான பாதுகாப்பும் கூட''என்றார்.