திருப்பூர்:இந்து முன்னணி கிழக்கு ஒன்றியம் செயற்குழு கூட்டம் ராக்கியாபாளையம் பிரிவு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
டிச., 6ம் தேதி(நாளை), 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடத்த வேண்டும்; 29ம் தேதி நடக்கும் இந்து சங்கம நிகழ்ச்சி முன்னிட்டு, அனைத்து பகுதிகளில் கட்டுரை போட்டி நடந்து வருகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசளிப்பு விழா மற்றும் தெய்வீக தமிழ் என்ற தலைப்பில், 'இந்து சங்கம விழா' நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.