திருப்பூர்:திருப்பூர் காந்திநகர், ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.திருப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார்.
ஏ.வி.பி., கல்வி குழும தலைவரும், ரோட்டரி கவர்னருமான கார்த்திகேயன் சிறப்புரை வழங்கினார்.பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் மெய்நம்பி, ரோட்டரி துணை கவர்னர் ஆனந்தராம் முன்னிலை வகித்தனர்.முயற்சி மக்கள் இயக்க செயலாளர் பரமசிவம் ரத்ததானம் குறித்த முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ரோட்டரி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என, ஏராளமானோர் ரத்ததானம் வழங்கினர்.திருப்பூர் அரசு பொது மருத்துவமனை அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.