பொது செய்தி

தமிழ்நாடு

இலவச வேட்டி,சேலை விநியோகிக்க தீவிரம்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019
Advertisement

திருப்பூர்:தமிழகத்தில், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு, பொங்கல் மற்றும் தீபாவளிக்கு வேட்டி, வேலை வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், ஐந்து லட்சத்து, 17 ஆயிரத்து, 532 பெண்களுக்கு சேலையும், ஐந்து லட்சத்து, 17 ஆயிரத்து, 696 ஆண்களுக்கு வேட்டியும் வழங்கப்பட உள்ளது தமிழக முதல்வர் பழனிசாமி, இலவச வேட்டி, சேலை வினியோகத்தை துவக்கி வைத்துள்ளார். பொங்கல் பரிசு பொருட்களுடன், வேட்டி, சேலையை சேர்த்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வேட்டி, சேலை பண்டல்களை, ரேஷன் கடைக்கு அனுப்பி வைத்து, ரேஷன் கடையில் வேட்டி, சேலை வினியோகம் செய்யப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக, தாராபுரத்தில், 80 ஆயிரத்து, 763 பயனாளிகள் வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட உள்ளது. குறைந்தபட்சமாக, ஊத்துக்குளியில், 27 ஆயிரத்து, 053 பயனாளிகள், வேட்டி மற்றும் சேலை பெற உள்ளனர்.திருப்பூர் தெற்கு தாலுகாவில் மட்டும் 60 ஆயிரத்து, 819 சேலையும், 60 ஆயிரத்து, 983 வேட்டியும் வழங்கப்பட வேண்டுமென, வருவாய்த்துறை கணக்கிட்டுள்ளது. கைத்தறி துணிநுால் துறை சார்பில், கூட்டுறவு சங்கங்களில் இருந்து, நெசவு செய்த வேட்டி, சேலைகளை தருவிக்கும் பணி துவங்கியுள்ளது. பண்டிகைக்கு முன்பாக, வினியோகம் செய்யப்படுமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X