பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி சர்க்கரை ஆலையில் கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

Added : டிச 05, 2019
Advertisement

திருவாலங்காடு:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகள் தனியார் ஆலைக்கு கரும்புகள் கொண்டு செல்வதை தடுக்க, கண்காணிப்பு குழு அமைத்துள்ளது.

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 3,200 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்தாண்டு பருவ மழை இல்லாததால், 1,200 விவசாயிகள் மட்டுமே கரும்பு பயிரிட்டுள்ளனர்.நடப்பாண்டிற்கான கரும்பு அரவையை, கடந்த மாதம், 1ம் தேதி, கலெக்டர் மகேஸ்வரி துவங்கி வைத்தார். கரும்பு அரவை, 1.34 லட்சம் டன் என இலக்கு நிர்ணயம் செய்து, அரவை துவக்கியுள்ளது.நேற்று முன்தினம் வரை, 47 ஆயிரம் டன் கரும்பு மட்டுமே அரவை செய்துள்ளது. அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம், கடைசி வாரத்தில், கரும்பு அரவை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில், சில விவசாயிகள் தங்களது கரும்புகளை வெட்டி, தனியார் ஆலைக்கு அனுப்பி வருகின்றனர்.இதை தடுக்கும் வகையில், கலெக்டர் மகேஸ்வரி உத்தரவின்படி, கரும்பு விவசாயிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.தனியார் ஆலைக்கு ஓட்டிச் செல்லும் கரும்புகளை தடுத்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கொண்டு வருவதற்கு, மொத்தம் நான்கு கண்காணிப்பு குழுக்கள்அமைத்து, செயல்பட்டு வருகிறது என, ஆலையின் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X