பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டை கடக்க, இனி கஷ்டம் இல்லை : நடை மேம்பாலம் பணிகள் துவக்கம்

Added : டிச 05, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் பாதசாரிகள் ரோட்டைக் கடக்கும் வகையில், நடை மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. இதனால், பாதசாரிகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

திருப்பூர் மாநகரில், முக்கிய ரோடுகள் அனைத்தும் நெருக்கடியான வாகனப் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவோர், பணிக்குச் செல்வோர், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் அதிகளவில் முக்கிய ரோடுகள் வழியாக நடந்து செல்கின்றனர்.பல்வேறு இடங்களில் இவர்கள் ரோட்டைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஆனால், வாகன நெருக்கடிக்கு மத்தியில் ரோட்டைக் கடந்து செல்ல பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.இதற்கு தீர்வு காணும் வகையில், நகரின் முக்கிய சாலைகளில், ரோட்டைக் கடந்து செல்லும் வகையில், நடை மேம்பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

இதற்காக, டவுன்ஹால், காங்கயம் ரோடு, புஷ்பா சந்திப்பு, மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.நீண்ட காலம் இப்பணி கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தது. தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி, ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி போன்ற காரணங்களால் நடை மேம்பாலம் செயல்பாட்டுக்கு வருவது தாமதமானது.

இந்நிலையில், தற்போது ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் நடை மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக பில்லர் அமைக்க குழி தோண்டும் பணி துவங்கியது. ஆனால், குழி தோண்டி பல நாட்களாகியும் இப்பணி தொடராமல் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், குழி தோண்டிய இடத்தில் பொதுமக்கள் தடுமாறிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி உதவி கமிஷனர் கண்ணன் கூறுகையில், 'நடை மேம்பாலத்துக்கு பில்லர் அமைக்க குழி தோண்டும் இடத்தில் கேபிள்கள் உள்ளன. இவற்றை இடமாற்றும் பணி நடக்கிறது. இரண்டொரு நாளில், பில்லர் அமைக்கப்படும். நடை மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X