ஒசைரி நூல் வியாபாரிகள் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒசைரி நூல் வியாபாரிகள் ஆலோசனை

Added : டிச 05, 2019
 ஒசைரி நூல் வியாபாரிகள் ஆலோசனை

திருப்பூர்:''ஒசைரி நுால் வியாபாரிகள் வாடிக்கையாளர் நிலை குறித்து முழு விவரங்களுடன் வர்த்தகம் செய்ய வேண்டும்'' என, ஒசைரி நூல் வியாபாரிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப் பட்டது.

திருப்பூர் ஒசைரி நுால் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் உமாபதி, துணை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.வெளிநாடுகளில் பல்வேறு ஆடை வர்த்தக நிறுவனங்கள் கடும் நஷ்டம் காரணமாக மூடப்பட்டு விட்டது. இதன் தொடர்ச்சியாக திருப்பூரில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா; நுால் வர்த்தகத்தின் நிலை என்னவாக இருக்கும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள் நிலுவையில் உள்ள தொகை; வர்த்தக நடவடிக்கைகள்; ஆர்பிட்ரேசன் கவுன்சில் மற்றும் போலீஸ் தரப்பில் விசாரணையில் உள்ள பிரச்னைகள் நிலை குறித்து உறுப்பினர்கள் பேசினர்.நுால் சப்ளை செய்யும் நிறுவனங்கள் குறித்து முழு விவரங்களுடன் செயல்பட வேண்டும். வியாபாரிகள் லாபம் என்ற நோக்கத்தை விடுத்து, பெயரைக் கெடுத்துக் கொள்ளாத வகையில், வர்த்தகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X