சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊழியர் மோதல் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
திருப்பூர்:பேன்ட்ரி ஊழியர்கள் - ஸ்டேஷன் டீ விற்பனையாளர் மோதலால், ரப்திசாகர் ரயில் புறப்படுவதில், 20 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.திருவனந்தபுரம்- கோரக்பூர் இடையே இயங்கும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 4:20 மணிக்கு திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்பனை செய்யும் திருநாவுக்கரசு ரயில் பயணிகளுக்கு டீ விற்பனை செய்தார்.ரயிலில் இருந்த 'பேன்ட்ரி'

திருப்பூர்:பேன்ட்ரி ஊழியர்கள் - ஸ்டேஷன் டீ விற்பனையாளர் மோதலால், ரப்திசாகர் ரயில் புறப்படுவதில், 20 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.

திருவனந்தபுரம்- கோரக்பூர் இடையே இயங்கும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 4:20 மணிக்கு திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்பனை செய்யும் திருநாவுக்கரசு ரயில் பயணிகளுக்கு டீ விற்பனை செய்தார்.ரயிலில் இருந்த 'பேன்ட்ரி' ஊழியர்கள் அவருடன் தகராறு செய்து, அவரை தாக்கினர்.

இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. ரயிலின் கார்டு தகவல் அளித்து ரயில்வே போலீசார் பிளாட்பாரத்துக்குச் சென்று தகராறில் ஈடுபட்ட இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். இதனால், 20 நிமிடம் தாமதமாக எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டது. ரயில் புறப்பட்ட தாமதமானதால், பயணிகள் இடையே பெரும் பரபரப்புநிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X