சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் திருடிய கும்பல் கைது

Added : டிச 05, 2019
Advertisement

திருத்தணி:இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து, மொபைல் போன்கள் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருத்தணி அடுத்த, மாம்பாக்கசத்திரம் கூட்டுச்சாலையில், சில நாட்களாக இரவு மற்றும் பகல் நேரத்தில், மர்ம நபர்கள் அவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை வழிமடக்கி தாக்கி, மொபைல் போன்கள், பணத்தை பறித்து வந்தனர்.பாதிக்கப்பட்டவர்கள், திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து வந்தனர்.இந்நிலையில் நேற்று, திருத்தணி போலீசார் மேற்கண்ட இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு வாலிபர்கள் நின்று கொண்டு, அவ்வழியாக வந்த ஒரு நபரை மடக்கி அடித்து, மொபைல் போன் பறித்தனர்.

இதை பார்த்த போலீசார், வாலிபர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது, மூன்று பேர், ஒரு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பினர்.மீதமுள்ள மூன்று பேரை மடக்கி பிடித்து, கைது செய்தனர். விசாரணையில், அரக்கோணம் தாலுகா, கூடலுார் சுஜித், 19, ஷியாம் சுந்தர், 18, பரத், 20, என தெரிய வந்தது.மேலும், அவர்களிடம் இருந்து, எட்டு மொபைல் போன்கள், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்; தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X