பொது செய்தி

தமிழ்நாடு

7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருப்பூர் எழுத்தாளரின் கதை

Added : டிச 05, 2019
Advertisement

திருப்பூர்:கல்வித்துறை சார்பில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடப்புத்தகம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதில், ஏழாம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் இயல் பகுதியில், திருப்பூரை சேர்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் எழுதிய 'பள்ளி மறுதிறப்பு' எனும் கதை, பாடமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்தி சிறுகதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நுால்களை எழுதியுள்ளார்.

பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தன் கதை குறித்து பேசியதாவது:ஒவ்வொரு மனிதனுக்கும் சில கடமைகள் உண்டு. அவை மனதனின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப மாறுபடும். இளமைப்பருவம் கல்விக்கு உரியது. எனவேதான், இளமையில் கல் என அவ்வையார் கூறினார். இளமையில் கற்பதே ஒருவனை சான்றோனாக உருவாக்கும். எந்த காரணத்திற்காகவும் கல்வி கற்பதை தவிர்க்க கூடாது என்பதை உணர்த்தும் கதை இது.

பின்னலாடை நகரமான திருப்பூரில் இரு சிறுவர்கள் கோடை விடுமுறையை பனியன் கம்பெனிக்கு சென்று, சம்பாதித்த பணத்தை வைத்து ஜாலியாக கொண்டாடுகின்றனர். ஒரு கட்டத்தில் பள்ளிக்கு முழுக்கு போட்டுவிட்டு, பனியன் கம்பெனிக்கே செல்ல முடிவெடுக்கும் சமயம், முதியவர் ஒருவர் பஸ் ஸ்டாண்ட்டில் பஸ் எண் தெரியாமல் அருகில் இருப்பவர்களிடம் கேட்டு அவமானப்படுகிறார்.

இதைக்கண்ட சிறுவர்கள், எதிர்காலத்தில் நமக்கும் இதே நிலைதான், என மனம் திருந்துவதாக கதை எழுதியிருந்தேன். திடீரென நண்பர்கள் மூலமே இக்கதை பாடப்புத்தகத்தில் இடம் பெற்று இருப்பதை அறிந்தேன். என் எழுத்து ஏதேனும் வகையில் குழந்தைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்; மாணவர்களின் மனநிலையை மாற்றியிருக்கும் என, நம்புகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X