சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் 'சிசிடிவி' பதிவுகள் ஆய்வு

Added : டிச 05, 2019
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், சுற்றுச்சுவரில் துளையிட்டு, உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கொள்ளையனை பிடிக்க தனிபடை அமைக்கப்பட்டுள்ளது.கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரின் உருவம் கோவில் வளாகத் தில் உள்ள இரண்டு'சிசிடிவி'

அனுப்பர்பாளையம்:திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், சுற்றுச்சுவரில் துளையிட்டு, உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கொள்ளையனை பிடிக்க தனிபடை அமைக்கப்பட்டுள்ளது.கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரின் உருவம் கோவில் வளாகத் தில் உள்ள இரண்டு'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. அவன் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் கருப்பு துணி கட்டி உள்ளான்.

தனிப்படை போலீசார் மர்ம நபர் கொள்ளையில் ஈடுபடும் முன் பக்தர் வேடத்தில் கோவிலுக்கு வந்து சுவர் இடிக்கபோகும் இடத்தை வேவு பார்த்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனவே, கோவில், 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X