தண்ணீரில் மூழ்கியது மிளகாய்,நெற்பயிர்

Added : டிச 05, 2019
Advertisement
 தண்ணீரில் மூழ்கியது மிளகாய்,நெற்பயிர்

இளையான்குடி:இளையான்குடியில் பெய்த தொடர் மழை காரணமாக மிளகாய், நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி கிடப்பதால் விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

இளையான்குடி பகுதி யில் கண்ணமங்கலம், சாத்தனி, சோதுகுடி, சேத்தனுார், பூச்சியேந்தல், கரும்புகூட்டம், கருஞ்சுத்தி, சாலைகிராமம், முனைவென்றி உட்பட ஏராளமான பகுதிகளில் 3500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் மிளகாய் பயிரிட்டு இருந்தனர்.கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக வயல்வெளிகளில் மிளகாய் செடிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

தற்போது மிளகாய் செடிகளில் பூ பூத்து காய் காய்க்கின்ற பருவத்தில் செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து கண்ணமங்கலம் பூபதி 42,கூறுகையில்,தற்போது மிளகாய் செடிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவழித்துள்ளோம்,தற்போது மழை நீரில் செடிகள் மூழ்கி கிடப்பதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இதே போன்று இளையான்குடி தெற்கு கீரனுார் அருகே உள்ள கல்வெளி பொட்டலில் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் 50 ஏக்கரில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X