நகராட்சி அலுவலகத்தைமுற்றுகையிட்ட பெற்றோர்

Added : டிச 05, 2019
Advertisement

காரைக்குடி:காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரை சரிசெய்யாததால்,பெற்றோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டனர்.

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிதுவக்கப்பள்ளியில், தற்போது பெய்து வரும் மழையால் மழைநீர்தேங்கி கிடக்கிறது. கடந்த திங்களன்று, மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல பாதுகாப்பாக, பெஞ்சில் பாலம் அமைத்தனர். பள்ளிக்குள் பாம்பும் நுழைந்தது. அஞ்சியபெற்றோர் பலர் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

பம்ப்செட் மூலம் தண்ணீரை வெளியேற்றி தற்காலிக தீர்வுகண்டனர். ஆனால் தினமும் பெய்து வரும் மழையால், மீண்டும்பள்ளிக்குள் மழைநீர் தேங்கி கிடக்கிறது.ஆத்திரமடைந்தபெற்றோர் நிரந்தர தீர்வு வேண்டி, நேற்று காலை, காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X