சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்:

Added : டிச 05, 2019
Advertisement

மதகுபட்டியில் வீட்டில் புகுந்து 14 பவுன் நகை கொள்ளை

சிவகங்கை: மதகுபட்டி அருகே சொக்கலிங்கபுரம் உதயகுமார் 61. இவர் தனியார் கம்பெனியில் கணக்காளராக இருந்தார். சிவகங்கையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தன் மகனை பார்ப்பதற்காக நவ.,29 அன்று காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு சிவகங்கை வந்துள்ளார். டிச.,3 அன்று காலை 7:00 மணிக்கு, இவரது வீட்டிற்கு சென்ற பால் வியாபாரி வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்துள்ளார். இது குறித்து அவரிடம் தெரிவித்தார். உதயகுமார் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் பீரோவில் இருந்த 14 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதை உறுதி செய்தார். புகாரின்படி மதகுபட்டி எஸ்.ஐ., ரஞ்சித் விசாரித்து வருகிறார்.

மருத்துவமனையில்அலைபேசி, நகை திருட்டு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு, ஸ்கேன், இ.சி.ஜி., சென்டர்களுக்கு ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். டாக்டர், பயிற்சி டாக்டர்கள் என 170 பேர் வரை பணிபுரிகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பிற்கென தனியார் நிறுவன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவற்றையும் மீறி இங்கு டாக்டர், நோயாளிகளின் அலைபேசி, நகைகள் திருட்டு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த வாரம் மகப்பேறு மருத்துவ பிரிவில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவரின் விலை உயர்ந்த அலைபேசியை சிலர் திருடிச்சென்றனர். அதே போன்று நேற்று ‛ஸ்கேன்' எடுக்க சென்ற மூதாட்டி ஒருவரிடம், மருத்துவமனை ஊழியர்கள் எனக்கூறிய சிலர் ‛ஸ்கேன்' ரூமிற்கு செல்லும் முன் நகைகளை தங்களிடம் கழட்டி தருமாறு கூறியுள்ளனர். ஊழியர்கள் என நம்பிய அந்த மூதாட்டி கழுத்தில் இருந்த 1 பவுன் செயின், ஒரு ஜோடி தோட்டை கழட்டி கொடுத்துள்ளார். ‛ஸ்கேன்' எடுத்து வந்து பார்த்தபோது அவர்கள் ‛எஸ்கேப்' ஆனது தெரியவந்தது. இது போன்று தொடர் திருட்டால் நோயாளிகள், டாக்டர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.

உணவுபடியை அதிகரித்து வழங்கபோலீசாரின் குடும்பம் எதிர்பார்ப்பு

சிவகங்கை: மாதந்தோறும் வழங்கும் உணவுபடியை 6 நாட்களாக கணக்கிட்டு வழங்க வேண்டும் என சிவகங்கை போலீசார் எதிர்பார்க்கின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் ஆயுதப்படை, போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் 2ம் நிலை போலீசார் முதல் எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள், வெளிமாவட்ட பாதுகாப்பு, அமைச்சர் வருகை, அரசு விழா, கோயில் விழா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம், மாதத்திற்கு அதிகபட்சம் 6 நாட்கள் வரை உணவு படி வழங்கலாம். இவற்றை எஸ்.பி.,க்கள் தடையின்றி மாதந்தோறும் வழங்கினால், போலீசார் குடும்ப செலவுக்கு உதவியாக இருக்கும். முன்பிருந்த எஸ்.பி., அரசுக்கு பணத்தை மிச்சம் செய்து தரும் நோக்கில் உணவுப்படியை போலீசார்களுக்கு வழங்கவில்லை என்ற புகார் இருந்தது. புதிதாக வந்த எஸ்.பி., ரோஹித்நாதன், போலீசார் நலன் கருதி மாதத்திற்கு 3 நாட்கள் என்ற விகிதாச்சாரப்படி உணவு படி வழங்கி வருகிறார். ஆனால், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பணிபுரியும் போலீசாருக்கு உணவுபடி மாதந்தோறும் 6 நாட்களாக கணக்கிட்டு வழங்குகின்றனர். எனவே, அதே போன்று சிவகங்கை மாவட்ட போலீசாருக்கும் மாதந்தோறும் 6 நாட்களாக கணக்கிட்டு உணவுபடி வழங்கவேண்டும் என போலீசாரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X