மானாமதுரை:மானாமதுரை தயா நகரில் ரோட்டில் மழைநீர் தேங்கி குண்டும், குழியுமாக காணப்படுவதால்மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
மானாமதுரை காட்டு உடைகுளம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தயா நகரில்நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.மேலும் இங்கு தொழுநோய் மருத்துவமனையும் உள்ளதால் தினமும் வெளியூர்களில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர்.கடந்த ஒரு வாரமாக மானாமதுரையில் தொடர் மழை பெய்து வருவதால் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
பஸ் ஸ்டாப்பில் இருந்து வருகிற ரோடும் குண்டும்,குழியுமாக இருப்பதினால் பஸ்களில் இருந்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது: ரோடு மற்றும் இந்த பகுதியில் உள்ள குறைகள் குறித்து ஊராட்சிஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை கூறியும்எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.