பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை பயிர் மேலாண்மை பயிற்சி

Added : டிச 05, 2019
Advertisement

சிவகங்கை:காளையார்கோவில் அருகே மந்திக்கண்மாயில் 'அட்மா' விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நிலக்கடலையில் பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு நடந்தது.

காளையார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராகவன், நிலக்கடலை சாகுபடிக்கு நிலம் தயாரித்தல், விதை தேர்வு மற்றும் டிரைக்கோடொமா விரிடியை ஒரு கிலோவிற்கு 4 கிராம் என்ற அளவில் விதைநேர்த்தி செய்யும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

உதவி வேளாண்மை அலுவலர் விஜயகுமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தம்பித்துரை அட்மா திட்டம் பற்றி கூறினர். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் திவ்யா, அருண்மொழி ஏற்பாட்டை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X