சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் ஸ்டேஷன்களுக்கு ஓடிய போலீசார்

Added : டிச 05, 2019
Advertisement

சிவகங்கை:போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முதல் போலீசார் வரை திடீரென ஆஜராக நள்ளிரவு 12:00 மணிக்கு எஸ்.பி., விடுத்த உத்தரவால், போலீசார் ஸ்டேஷன்களுக்கு அலறியடித்து சென்றனர்.

டிச.,3 அன்று இரவு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் அந்தந்த சப் டிவிஷன்களில் போலீசார் இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். சில அதிகாரிகள் மற்றும் போலீசார் பணி முடிந்து வீட்டுக்கு சென்றிருந்தனர். அன்று நள்ளிரவு 12:00 மணிக்கு அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் முதல் போலீசார் வரை அனைவரும் உடனே ஸ்டேஷன்களில் ஆஜராக எஸ்.பி., உத்தரவிட்டார்.

பணியில் இருந்த மற்றும் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற அனைத்து டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் 2ம் நிலை போலீசார் வரை அனைவரும் அலறியடித்துக்கொண்டு, மாவட்டத்தில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னையா, என்னவோ... என எண்ணி பதட்டத்துடன் ஸ்டேஷன்களுக்கு நள்ளிரவு 12:00 மணிக்கு வந்தனர். அங்கு 'ரோல்கால்' எடுக்கப்பட்டு பின்னர் அன்றாட பணிக்கு திரும்பினர்.

போலீசார் கூறியதாவது: மாவட்டத்திற்குள் அமைப்பு ரீதியாக பிரச்னை வரப்போகிறது என தவறான தகவல்களை எஸ்.பி.,க்கு சிலர் கொடுத்துள்ளனர். இதனால் அனைத்து போலீசாரையும் ஸ்டேஷனுக்கு அழைத்ததாக தெரிவித்தனர்.எஸ்.பி., ரோஹித்நாதன் கூறியதாவது: பயப்படும்படி ஒன்றுமில்லை. பேரிடர் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நேரிட்டால், உடனே போலீசாரை எப்படி ஒருங்கிணைப்பது என்பது குறித்த பயிற்சிக்காக அழைத்தோம். போலீசில் இதுவும் ஒருவித பயிற்சி தான், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X