பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் இன்று கட்டுரை, ஓவிய போட்டி

Added : டிச 05, 2019
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் இன்று மாணவர்களுக்கான கட்டுரை, ஓவிய போட்டி நடைபெறும்,'' என சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன உதவி இயக்குனர் உமாசந்திரிகா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் சார்பில் மாவட்டத்திற்கு உகந்த தொழில்கள்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி, சிவகங்கையின் பாரம்பரிய கலைகள்' என்ற தலைப்பில் ஓவியபோட்டியும் நடக்கிறது.

போட்டிகள் சிவகங்கை புனித ஜஸ்டின் மகளிர் பள்ளியில், காலை 9: 30 முதல் பகல் 1:00 மணி வரை நடக்கிறது.அனுமதி கட்டணம் இல்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ.7 ஆயிரத்து 500, 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் என வெற்றி பெறும் மாணவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளி மாணவ, மாணவிகளை இப்போட்டியில் பங்கேற்க செய்யலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X