பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் கலை திருவிழா

Added : டிச 05, 2019
Advertisement
 பள்ளியில் கலை திருவிழா

சிவகாசிசிவகாசி முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சார்பில் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் உமறுப்புலவர் இலக்கிய மன்றம் கலை திருவிழா கொண்டாடப்பட்டது.
கல்வி நிறுவன தாளாளர் முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார். தலைமையாசிரியர்கள் ேஷக் முகம்மதுமீரான், திருப்பதி வரவேற்றனர். பெரிய பள்ளிவாசல் தலைவர் பீர்முகம்மது , துணைத்தலைவர் முகம்மது நவாப், முகம்மது சிந்தாஷா, முகம்மது மைதீன், அன்வர்தீன் முகம்மது இஸ்மாயில், முகம்மது ஜமீல், முகம்மது சிந்தாமதார் முன்னிலை வகித்தனர். பட்டிமன்ற பேச்சாளர் கவிதா துவக்கி வைத்தார். திரைப்பட இயக்குனர் வசந்தபாலான் பேசினார். இதையொட்டி நடந்த போட்டியில் வி.எஸ்.கே.டி., பதின்ம பள்ளி முதல் பரிசை பெற்றது. சிறந்த மாணவருக்கான இலக்கிய கோப்பையை ஹரிஹரன், மாணவிக்கான பரிசை பேபிலட்சுமி பெற்றனர். இதை உதவி பேராசிரியர் சையது அலி, பேராசிரியர் முகம்மது அபுபக்கர் சித்திக் வழங்கினர். நர்சரி பள்ளி முதல்வர் மேனகா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X