சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூடப்பட்டுள்ள நாட்டார் கால்வாய் திறக்கப்படுமா: 16 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

Added : டிச 05, 2019
Advertisement
மூடப்பட்டுள்ள  நாட்டார் கால்வாய் திறக்கப்படுமா: 16 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை:மானாமதுரை அருகே கிளங்காட்டூர்,வளநாடு உள்ளிட்ட 16 கிராமங்கள் பயன்பெறும் நாட்டார் கால்வாயை அடைத்து வைத்திருப்பதை உடனடியாக திறக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கிருங்காகோட்டையில் இருந்து ராஜகம்பீரம், வளநாடு, கிளங்காட்டூர் உள்ளிட்ட 16 கிராமமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.4 கோடி செலவில் நாட்டார் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் 16 கிராம கண்மாய்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன.இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பின் பராமரிப்பின்றி கருவேல மரங்கள்,நாணல் வளர்ந்து புதர் மண்டியதால் தண்ணீர் வரத்து இல்லாமல் போனதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு ரூ.20 லட்சம் செலவில் கால்வாய் துார்வாரப்பட்டது.

ராஜகம்பீரம் புதுார் கண்மாய் நிரம்பி கிளங்காட்டூர் கண்மாய்க்கு தண்ணீர் வரும் பாதையில் கிளங்காட்டூர் உள்ளிட்ட 15 கிராமங்கள் மற்றும் அன்னவாசல் ஆகிய கிராமங்களுக்கு தனித்தனி கால்வாய் மூலம் தண்ணீர் பிரிகிறது.இதில் கிளங்காட்டூர் கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் பாதையை தற்போது பொதுப்பணித்துறையினர் அடைத்து வைத்திருப்பதால் சில ஆண்டுகளாக மழை தண்ணீர் கூட கிளங்காட்டூர் மற்றும் கிராம கண்மாய்க்கு தண்ணீர் செல்லவில்லை.

இதுகுறித்து கிளங்காட்டூர் விவசாயிகள் கூறுகையில் கிளங்காட்டூர் மற்றும் இந்த கால்வாயை நம்பி 550 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. ஆனால் தண்ணீர் வரும் சூழலில் தற்போது கால்வாயை பொதுப்பணித்துறையினர் அடைத்து வைத்துள்ளனர்,இது குறித்து பல முறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X