பொது செய்தி

தமிழ்நாடு

3,748 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நாளை வேட்பு மனு தாக்கல் துவக்கம்

Added : டிச 05, 2019
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் 3,748 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நாளை (டிச.6) வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.

தமிழகத்தில் டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சி தலைவர்கள், 3126 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 161 ஒன்றிய கவுன்சிலர்கள், 16 மாவட்ட கவுன்சிலர்கள் என மொத்தம் 3,748 உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வேட்பு மனு நாளை (டிச.6) துவங்கி டிச.13 வரை நடக்கிறது.

ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்பு மனுக்கள் பெறப்படும். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு அதிகமான ஊராட்சிகள் அடங்கிய ஊராட்சி ஒன்றியத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படும். காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுக்களை பெறுவர்.
வேட்பாளர்கள் உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து படிவம் 3 மற்றும் 3 ஏ ஆகியவற்றை பெற்று பூர்த்தி செய்து அதனுடன் நோட்டரி பப்ளிக்கிடம் இருந்து பெறப்பட்ட பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும். ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு போட்டியிடுபவர் மட்டும் வேட்புமனுவுடன் சொந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் போதுமானது.

தேர்தல் நடத்துவதற்கு தேவையான வேட்புமனு உள்ளிட்ட 40 வகையான படிவங்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு தயார்நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X