பொது செய்தி

தமிழ்நாடு

முத்துப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி முன் பெற்றோருடன் மாணவர்கள் தர்ணா ஆசிரியர் பிரச்னைக்காக கல்வி பாதிப்பதா

Added : டிச 05, 2019
Advertisement
 முத்துப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி முன்  பெற்றோருடன் மாணவர்கள் தர்ணா ஆசிரியர்  பிரச்னைக்காக கல்வி பாதிப்பதா

சிவகங்கை:சிவகங்கை அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்குள் எழுந்த பிரச்னையால் மாணவர்களின் கல்வி பாதிப்பதை கண்டித்து பெற்றோர், மாணவர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 120 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி, நவ.,27 அன்று காலை 9:20 மணிக்கு பள்ளி இறைவணக்க கூட்டத்தில் திட்டியதாக கூறி, ஆசிரியை சங்கீதா ஆய்வகத்தில் இருந்த கெமிக்கலை குடித்து, அரசு மருத்துவமனையில் உள்ளார்.

இப்பிரச்னையால் பள்ளிக்கு ஆசிரியர்கள் சிலர் சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது. அரையாண்டு தேர்வு துவங்கும் நிலையில் மாணவர்களுக்கான கற்பித்தல் பணி பாதிப்பதாக கூறி, நேற்று காலை 9:00 மணிக்கு மாணவர்கள், பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டனர். காலை 9:45 மணி வரை பள்ளி திறக்கப்படவில்லை.

தாசில்தார் மைலாவதி, மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, வட்டார கல்வி அலுவலர் லதாதேவி சமரசம் செய்தனர். 10:00 மணிக்கு மீண்டும் பள்ளி துவங்கியது.பின்னர், மாவட்ட கல்வி அலுவலர், தாசில்தார் இருவரும் பள்ளியில் உள்ள ஆசிரியர், மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்திச் சென்றனர். இது குறித்த அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மூலம் கலெக்டர் ஜெயகாந்தனிடம் வழங்க உள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர், பெற்றோரை துாண்டிவிட்ட ஆசிரியைகள் மீது துறை ரீதியான நடவடிக்கை இருக்கும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X