பொது செய்தி

தமிழ்நாடு

இப்பவோ...எப்பவோ... அச்சுறுத்தும் எலும்புக்கூடான மின் கம்பங்கள்..தரம்,பராமரிப்பு முறையாக இல்லாது அசட்டை.

Added : டிச 05, 2019
Advertisement
 இப்பவோ...எப்பவோ...  அச்சுறுத்தும் எலும்புக்கூடான மின் கம்பங்கள்..தரம்,பராமரிப்பு முறையாக இல்லாது அசட்டை.

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் நகர் , கிராமம் என எல்லா இடங்களிலும் பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமடைந்து விபத்திற்குள்ளாகும் நிலையில் உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆரம்ப காலங்களில் இரும்பிலான மின்கம்பங்களை பயன்படுத்தி வந்தது. இந்த கம்பங்கள் பயன்பாட்டுக்கு வந்து 50 ஆண்டுகளாகியும் இன்னும் நல்ல நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிமென்ட் மின்கம்பங்களை மின்சார வாரியம் பயன்படுத்தி வருகிறது. இக்கம்பங்கள் பயன்பாட்டுக்கு வந்த சில ஆண்டுகளிலே சிமென்ட் பூச்சு உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே துருத்தி கொண்டு எலும்புக்கூடாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் மின்கம்பத்தின் முழுப்பகுதியும் விரிசலடைந்து காணப்படுகிறது. பராமரிப்போ, சேதமடைந்தால் உடனடியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை.

ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்தை இணைப்பதற்காக வயல்வெளிகளில் ஊன்றப்பட்டுள்ள மின்கம்பங்களையும் மின்வாரியத்தினர் கண்டுகொள்வதில்லை. நடமாட்டம் இல்லாத, கருவேலம் மரங்கள் , புதர்கள் அடர்ந்த பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அறுந்து சாய்ந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. பெரும்பாலான மின்கம்பங்கள் முற்றிலும் சேதமான நிலையில் 'எர்த்' பயன்பாட்டிற்காக போடப்பட்டிருக்கும் கம்பிகளின் இழுதிறனிலே நிற்கின்றன.இது போன்றவற்றை மாற்ற மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X