தகுதி நீக்க எம்.எல்.ஏ.,க்களின் எதிர்காலத்துக்கு இன்று தீர்ப்பு

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
பெங்களூரு,: கர்நாடகத்தின் தகுதிநீக்க எம்.எல்.ஏ.,க்களின் எதிர்காலத்தை, வாக்காளர்கள் இன்று தீர்மானிக்கின்றனர். கர்நாடகத்தின் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், காலியான தொகுதிகளில், 15ல் மட்டும், இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு மாலை 6:00 மணி வரை நடக்கிறது.மொத்தம், 19 லட்சத்து, 25 ஆயிரத்து, 529 ஆண்கள்; 18 லட்சத்து, 52 ஆயிரத்து, 27
தகுதி நீக்க எம்.எல்.ஏ.,க்களின் எதிர்காலத்துக்கு இன்று தீர்ப்பு

பெங்களூரு,: கர்நாடகத்தின் தகுதிநீக்க எம்.எல்.ஏ.,க்களின் எதிர்காலத்தை, வாக்காளர்கள் இன்று தீர்மானிக்கின்றனர். கர்நாடகத்தின் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், காலியான தொகுதிகளில், 15ல் மட்டும், இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு மாலை 6:00 மணி வரை நடக்கிறது.


latest tamil news


மொத்தம், 19 லட்சத்து, 25 ஆயிரத்து, 529 ஆண்கள்; 18 லட்சத்து, 52 ஆயிரத்து, 27 பெண்கள்; 414 திருநங்கையர் என, 37 லட்சத்து, 82 ஆயிரத்து, 681 வாக்காளர்கள், ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள்.ஓட்டுப்பதிவுக்காக, 4,185 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டுப்பதிவுக்கு தேவையான, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை அறிந்து கொள்ளும் வி.வி., பேட் இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம், தேர்தல் பணியாளர்களும், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் சென்றனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 42 ஆயிரம் பாதுகாப்பு ஊழியர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
05-டிச-201910:10:12 IST Report Abuse
suresh kumar நான் ஏதோ நம்ம 11 எம் எல் ஏ களின் வழக்குக்கு தீர்ப்பு என்று நினைத்துவிட்டேன்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201914:48:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அடகுதிமுக ஆட்சிக்கு முட்டு கொடுத்து ஊழலை ஒளிச்சு வெச்சி விளையாடும் காவி அரங்கத்தில் நீதிமன்றமும் ஒரு பங்கு வகிக்கிறது....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201909:17:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சாணக்கியருக்கு வயித்தை கலக்கிக்கிட்டு இருக்கும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201909:17:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "தகுதி நீக்க எம்.எல்.ஏ.,க்களின் எதிர்காலத்துக்கு இன்று ஆப்பு", அதான் சரியான தலைப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X