மதுரை:மதுரை கோட்ட ரயில்வே சார்பில் பாதை பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (டிச.,5) முதல் 15 வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில் - கோவை - நாகர்கோவில் ரயில் (56319/56320) டிச.,5 முதல் 15 வரை வியாழன் தவிர திண்டுக்கல் - திருப்பரங்குன்றம் இடையே ரத்து செய்யப்படும்.
பாலக்காடு - திருச்செந்துார்- பாலக்காடு ரயில் (56769/56770) டிச.,8, 11, 15 ஆகிய நாட்களில் மதுரை - நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையேயும், டிச., 5,6,7,10,12,13, 14 ஆகிய நாட்களில் கோவில்பட்டி - நெல்லை இடையேயும் ரத்து செய்யப்படும்.
செங்கோட்டை - மதுரை ரயில் (56734/56735) டிச.,6 முதல் 12 வரை வியாழன் தவிர விருதுநகர் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும். மதுரை - ராமேஸ்வரம் - மதுரை ரயில் (56723/56722) டிச.,11 முதல் 14 வரை உச்சிப்புளி - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படும்.
தாம்பரம்-நாகர்கோவில்- தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (16191/16192) டிச.,5 முதல் 12 வரை திண்டுக்கல்-நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும்.
எனினும் டிச.,8,15 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் அந்தியோதயாரயிலும், டிச.,9 ல் நாகர்கோவிலிலிருந்து புறப்படும் அந்தியோதயா ரயிலும் வழக்கம்போல் இயக்கப்படும்.
திருச்சி - மானாமதுரை ரயில் (76807/) டிச.,5 முதல் 14 வரை திருச்சியிலிருந்து காலை 10:40 மணிக்கு பதிலாக காலை 10:05 மணிக்கு புறப்பட்டு மானாமதுரைக்கு பகல் 2:00 மணி 40 நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேரும். திருச்சி - திருவனந்தபுரம் விரைவு ரயில் (22627) டிச.,5 முதல் 15 வரை (9.12.19. தவிர) திருச்சியிலிருந்து காலை 7:10 மணிக்கு பதிலாக காலை 9:40 மணிக்கு 150 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.
சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) டிச.,5 முதல் 15 வரை வியாழன் தவிர மதுரை கோட்ட எல்லைக்குள் 125 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
சென்னை - துாத்துக்குடி இணைப்பு ரயில் (16129) டிச.,5 முதல் 15 வரை வியாழன் தவிர துாத்துக்குடிக்கு 95 நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும்.
திருச்சி - ராமேஸ்வரம் ரயில் (56829) டிச., 5 முதல் 7 வரை மற்றும் டிச.,9 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்திற்கு 40நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும். மதுரை - திண்டுக்கல் ரயில் (56708) டிச.,5 முதல் 15 வரை வியாழன் தவிர திண்டுக்கல்லுக்கு 40 நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE