தமிழ்நாடு

பீதி: வெளி மாநில சுற்றுலா பயணிகள்...: பாம்பன் பாலத்தில் பல்லாங்குழி

Added : டிச 05, 2019
Advertisement
பீதி: வெளி மாநில சுற்றுலா பயணிகள்...: பாம்பன் பாலத்தில்  பல்லாங்குழி


ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் குண்டும், குழியுமாக பல்லாங்குழியானதால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

பாம்பன் கடல் மீது அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகின்றனர். இப்பாலத்தில் 2018 ல் ஒரு கோடி ரூபாய் செலவில் 'வழுவழு' சாலை அமைத்த நாள்முதல் நுாறுக்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் நடந்தது.

இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.பின் உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழுவழு சாலையை அகற்றி, வழக்கமான தார் சாலை அமைத்தனர். இச்சாலையும் சமீபத்தில் பெய்த கன மழையை தாக்கு பிடிக்காமல் பாலத்தின் நடுவில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது.

பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது 'தடதட' என சத்தம் எழுவதால் இரவில் சுற்றுலா பயணிகள் பீதியடைகின்றனர்.மேலும் வாகன டயர்கள் சேதமடையும் அபாயம் உள்ளதால், பயணிகளுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தில் தரமான சாலை அமைக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X