சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

Added : டிச 05, 2019
Advertisement
 ராமேஸ்வரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை  அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் ஆக்கிரமிப்பு 'கமிஷன்' கடைகளை அகற்ற வலியுறுத்தி காதில் பூ சுற்றி, சங்கு ஊதி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கார்த்திகை, மார்கழியில் ராமேஸ்வரம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால், ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ளூர் நபர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தற்காலிக கடைகள் அமைத்து, வெளியூர் வியாபாரியிடம் கமிஷன் பணம் பெற்று விற்பார்கள். இக்கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல், மத்திய அரசு பள்ளிக்கு மாணவர்கள், நீதிமன்றத்திற்கு வக்கீல்கள், மக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி நேற்று பஸ் ஸ்டாண்டில் மார்க்சிஸ்ட் கட்சியினர் காதில் பூ சுற்றி, சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தாலுகா செயலர் சிவா, தாலுகா குழு உறுப்பினர்கள் கருணாகரன், ராமச்சந்திர பாபு, வக்கீல் மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர்கள் ஜஸ்டின், வெங்கடேஸ்வரி, அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X