மாவட்டத்தில்  157 பள்ளிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது

Added : டிச 05, 2019
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள 157 பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு நீரை அகற்றும் பணிகளை துவங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்திக்கு கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.பலத்த மழை பெய்த நிலையில், அனைத்து அரசுப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து உறுதி செய்யவும், பள்ளி வளாகங்களில் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் ஒன்றியத்தில் 8 அரசுப்பள்ளிகளிலும், திருப்புல்லாணி ஒன்றியம் 7, மண்டபம் 68, ஆர்.எஸ்.மங்கலம் 6, திருவாடானை 8, பரமக்குடி 6, போகலுார் 6, நயினார்கோவில் 2, முதுகுளத்துார் 10, கமுதி 3, கடலாடி 26 என 150 அரசுப்பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மண்டபம் ஒன்றியத்தில் 3 பள்ளிகளும், தனியார் பள்ளிகளில் நயினார்கோவில் 1, கமுதி 3 என மொத்தம் 4 பள்ளிகள், என மாவட்டம் முழுவதும் 157 பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

இங்கு நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து மழைநீரை அகற்றும் பணி துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X