பொது செய்தி

தமிழ்நாடு

படாதபாடுபடும் பழைய பஸ் ஸ்டாண்ட் : ராஜபாளையத்தில் பரிதவிக்கும் பயணிகள்

Added : டிச 05, 2019
Advertisement

ராஜபாளையம்:மாடுகள் புகலிடம்,டூவீலர் பார்க்கிங்,சுத்தமில்லா கழிப்பறைகள் என ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தினமும் படாதபாடுபடுகின்றனர்.

ராஜபாளையம் நகரின் வாகன பெருக்கத்தை சமாளிப்பதற்காக உள்ளூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்திற்கு டவுண் பஸ்கள் சென்று வர பழைய பஸ் ஸ்டாண்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு சில ஆண்டுகளுக்கு முன் மராமத்து பணிகள் நடந்த நிலையில் இலவச மற்றும் கட்டண கழிப்பறைகள் பணி முறையாக நடக்கவில்லை. நகராட்சி கட்டண கழிப்பறையின் மேல்நிலை தண்ணீர் தொட்டி மூடி சிதைந்து திறந்து கிடப்பதுடன் கொசு உற்பத்தி கேந்திரமாக உள்ளது. நகரெங்கும் தேடி அபராதம் விதித்து வரும் அதிகாரிகள் இவற்றையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.பழைய பஸ்ஸ்டாண்டின் பின்புறம் குப்பை வண்டிகளை வரிசையாக நிறுத்து்கின்றனர். இவற்றின் கழிவுகளில் வழிந்து செல்லும் நீர் பஸ் ஸ்டாண்டின்உள்பகுதியிலும் தேங்கி நிற்கிறது. இவை பயணியரின் மூக்கை பதம் பார்க்கிறது. இரவு நேரங்களில் திறந்த வெளி பாராக மாறுவதால் பலரும் பாதிக்கின்றனர். இங்கு அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு செயல்பாடுகள் இன்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் மக்கள் குடிநீரை காசுகொடுத்து வாங்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
இருக்கை வசதி முறையாக இல்லை. ஏற்கனவே உள்ளவற்றில் குடிமகன்கள் நித்திரையில் உள்ளதால் பயணியர் ஆபத்தான முறையில் தரையில் அமர்கின்றனர் . தளத்தினை உயர்த்தாமல் விட்டுள்ளதால் மழை நேரத்தில் கழிவு நீரும் தேங்குகிறது. இருக்கை வசதிகளை பராமரிப்பு செய்து குடிமகன்கள் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்.-முத்தீஸ்வரன்,உரிமையாளர் , பெட்டிக் கடை.
பஸ் ஸ்டாண்டில் இரவு நேரங்களில் பல்வேறு குற்ற செயல்கள் நடைபெறுகின்றன.இவற்றை போலீசார் கண்காணிப்பதில்லை. குற்றவாளிகளுக்கு மறைவிடமாக மாறும் இப்பகுதிக்கு தகுந்த கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அதுவரை போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.-முத்துராஜ், தொழில் முனைவோர்.
நகர் பகுதிக்கு வரும் பொதுமக்கள் பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த மனமின்றி பஸ் ஸ்டாண்டின் உள்ளே நிறுத்தி செல்கின்றனர். வெளியூரில் பணிபுரியும் அரசு, தனியார் ஊழியர்களும் டூவீலர்களை இங்குதான் நிறுத்தி செல்கின்றனர். இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட் இலவச பார்க்கிங் ஸ்டாண்ட் ஆகவே மாறியுள்ளது.-சிவகுமார், உரிமையாளர்,ஸ்வீட் ஸ்டால்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X