பொது செய்தி

தமிழ்நாடு

நோய் பாதிப்பில் வெங்காயம் கவலையில் விவசாயிகள்

Added : டிச 05, 2019
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் நோய்பாதிப்பிற்குள்ளானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் வடமேற்கு கிராமங்களான பூவாணி, பிள்ளையார்நத்தம், தொட்டியபட்டி, மீனாட்சிபுரம், குன்னுார், வலையபட்டி, நத்தம்பட்டி மற்றும் சில கிராமங்களில் வெங்காயம் பயிரிடுவது வழக்கம். நடப்பாண்டிலும் விவசாயிகள் 225 ஏக்கரில் வெங்காயம் பயிரிட்டுள்ளனர். தொடர்மழையால் வயல்களில் தண்ணீர் தேங்குவதால் பயிரிட்ட இடங்களின் சில பகுதிகளில் உள்ள வெங்காயபயிர்களில் வெள்ளைகருகல் ஏற்பட்டு அடுத்தடுத்த பயிர்களுக்கு பரவி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தகவலறிந்த தோட்டகலைத்துறை அதிகாரிகள் வெங்காயம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு தக்க மருத்துவ அறிவுரை கூறி உள்ளனர். 'இதை கடைபிடித்தபோதிலும் நோய் தாக்குதல் குறையவில்லை தற்போது அதிக விலைகொடுத்து வெங்காயம் பயிர்களை நட்டுள்ளநிலையில் நோய்பரவுவதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுவதால் உரிய இழப்பீடு வழங்க ' விவசாயிகள் .வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X