முதுகுளத்துார்:முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பருவமழையை நம்பி விவசாயிகள் நிலத்தை உழவுசெய்து நெல் விதைகள் விதைத்தனர்.
அவ்வப்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் முளைத்தது.ஆனால் பயிருக்கு சமமாக களைகள்வளர்ந்ததால் விவசாயிகள் கூலிக்கு ஆட்கள் வைத்து களைகள்பறித்தனர்.நெய்பயிர்கள்,மிளகாய்,பருத்தி செடிகள் நன்கு விளைந்துள்ளது.தற்போது பருவமழையால் முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 3 நாட்களாககனமழை பெய்தது. இதனால் நிலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கி செடிகள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தற்போது விவசாயிகள் நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை மின்மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர்.ஒருசில இடங்களில் பயிர்கள் மூழ்கி அழுகியதால் விவசாயத்திற்கு இந்தாண்டு செலவு செய்த பணம் வீணாகியது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.