கமுதி:கமுதி பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் நடவு செய்யப்பட்ட மிளகாய் செடிகள் தண்ணீரில் மிதப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கமுதி, பேரையூர், அபிராமம் பகுதியில் நாற்று வளர்ப்பு, நடவு மூலம் 800 ஏக்கருக்கும் மேல் பேரையூர், கொல்லங்குளம், ஆனையூர், பாக்குவெட்டி, கருங்குளம், மருதங்கநல்லுார், ப.கடம்பன்குளம், பசும்பொன், ஆர்.சோடனேந்தல், செங்கப்படை, புதுக்கோட்டை, இடைச்சியூரணி, மண்டலமாணிக்கம், கீழராமநதி, கிளாமரம் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மிளகாய் விவசாயம் செய்யபட்டுள்ளது.களை எடுப்பு, உரமிடுதல் நிறைவடைந்துள்ளது.
சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விவசாய நிலங்களில் இருந்து மழைநீர் வெளியேற முடியாமல், மிளகாய் செடிகள் தண்ணீரில் மிதக்கிறது. 3 நாட்களுக்கும் மேலாக தண்ணீரில் தத்தளிக்கும் மிளகாய் செடிகள்அழுகும் நிலையில் உள்ளது.கடன் வாங்கிசாகுபடிசெய்த மிளகாய் செடிகள்அழுகுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.-