பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.ஐ.டி., கல்லுாரியில் சர்வதேச செஸ் போட்டி

Added : டிச 05, 2019
Advertisement
 ஆர்.ஐ.டி., கல்லுாரியில்  சர்வதேச செஸ் போட்டி

ராஜபாளையம்:ராஜபாளையம் ஆர்.ஐ.டி கல்லுாரியில் சர்வதேச செஸ் போட்டி நான்கு நாட்கள் நடந்தது. இதற்கான பரிசளிப்பு விழாவில் ராம்கோ குழும தலைவர் வெங்கட்ராம ராஜா கலந்துகொண்டு ஏற்பாடுகளை பார்வையிட்டார். விருதுநகர் மாவட்ட செஸ் கூட்டமைப்பு தலைவர் கோபால்சாமி பரிசு வழங்கினார்.கல்லூரி துணைமுதல்வர் ராஜகருணாகரன் வரவேற்றார். எட்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 380க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். முதல்பரிசு ரூ. 70,000 சர்வதேச மாஸ்டர் ஹரிகிருஷ்ணன், இரண்டாம் பரிசு ரூ.50,000 கிராண்ட் மாஸ்டர் லட்சுமன், மூன்றாம் பரிசு ரூ. 35,000 செந்தில் மாறன் பெற்றனர். வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றிபெற்ற 98 வீரர்களுக்குரொக்கப்பரிசுகளும், 84 பரிசுக்கோப்பைகளும் வழங்கப்பட்டன.ராம்கோ கல்வி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட்ராஜ், கல்லூரி முதல்வர் கணேசன், சர்வதேச நடுவர் அனந்தராம், தமிழ்நாடு செஸ் கூட்டமைப்பின் இணை செயலாளர் விஜயராகவன் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குனர் வீரமணி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X