பொது செய்தி

தமிழ்நாடு

மரத்தில் ஏறியது முருங்கை: கிலோ ரூ.800

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (10)
Advertisement
முருங்கை, விலை உயர்வு,திண்டுக்கல், பொள்ளாச்சி

இந்த செய்தியை கேட்க

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வரத்து இல்லாததால், ஒரு கிலோ முருங்கைக்காய் கிலோ ரூ.800க்கு விற்பனையானது.

திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம்,ஒட்டன்சத்திரம், பழநியில் 2 ஆயிரம் ஹெக்டேரில் முருங்கை சாகுபடியாகிறது. இங்கிருந்து மதுரை, சேலம், கோவை, கேரளா மற்றும் ஆந்திராவிற்கும் விற்பனைக்கு செல்கிறது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு சீசன் காலத்தில் தினமும் 12 டன் முருங்கைக்காய் விற்பனைக்கு வரும். கடந்த 2 மாதங்களாக வரத்து குறைந்தது. உள்ளூர் வரத்து இல்லாததால் வியாபாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி விற்பனை செய்தனர். அதனால், கடந்த வாரம் கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்றது.







ஒரு கிலோ ரூ.800


தற்போது வெளியூர் வரத்தும் குறைந்து போனது. இதனால், நேற்று(டிச.,4) காலை ஒரு கிலோ ரூ.600க்கும், மாலை கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.800க்கும் விற்பனையானது.

வியாபாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் முருங்கை வரத்து இல்லாததால், கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோவுக்கு 10 முதல் 12 முருங்கைக்காய் இருக்கும். முகூர்த்த நாட்கள் என்பதால், கிலோ ரூ.1000 கொடுத்து வாங்க தயாராக இருக்கின்றனர். இதனால், ஒரு காய் ரூ.100 ஆகவும் வாய்ப்பு உள்ளது. வெங்காயத்தை விட விலை வேகமாக அதிகரித்து வருகிறது' என்றார்.


பொள்ளாச்சியில் ரூ.500க்கு விற்பனை


உற்பத்தி குறையும் சீசன்களில், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஒசூர், மற்றும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சமீப நாட்களாக, மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், 15 கிலோ எடையுள்ள கூடை தக்காளி, 280 முதல், 400 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது. கத்தரிக்காய் கிலோ, 60 ரூபாய்க்கு விற்றது. சீசன் காலங்களில் வரத்து அதிகம் இருந்தும், முருங்கைக்காய் கிலோவுக்கு, 10 - 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி விவசாயிகள், இழப்பை கொடுக்கும் முருங்கை சாகுபடியை விவசாயிகள் கைவிட்டுள்ளனர். சமீப நாட்களாக, மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்தது. கிலோ, 50 - 100 ரூபாய் வரை விற்பனையானது.கடந்த ஒரு வாரத்தில், முருங்கைக்காய் விலை கிலோ, 500 ரூபாயாக உயர்ந்தது. இது வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

மொத்த காய்கறி வியாபாரி பாலு கூறுகையில், ''தொடர்ந்து பெய்யும் பருவமழையால், தக்காளி மட்டுமின்றி, பெரும்பாலான காய்கறி வரத்து குறைந்துள்ளது. விளைச்சல் நிலத்தில் மழை நீர் தேங்கியதால், செடிகள் அழுகி விட்டன.தற்போது, முருங்கைக்காயின் விலையும் யாரும் எதிர்பாராத விதமாக உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரம், மூலனுார் பகுதியில் பெய்த தொடர் மழையால், மரங்களில் பூத்திருந்த ஒட்டு மொத்த முருங்கை பூக்களும் உதிர்ந்து விட்டதால், மரங்களில் காய்ப்பிடிப்பு குறைந்துவிட்டது.பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தால், பொள்ளாச்சி ஆர்டரின் பெயரில், ஒட்டன்சத்திரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிலோ முருங்கைக்காய், 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இது, பொள்ளாச்சி மார்க்கெட் வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை வியாபாரிகள் கிலோ, 600 ரூபாய் என விற்பனை செய்கின்றனர்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cbonf - doha,கத்தார்
05-டிச-201914:35:05 IST Report Abuse
cbonf இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெங்காயம் சாப்பிடுவதை எல்லோரும் நிறுத்தினால் தானாக வெங்காயம் விலை சரியும்
Rate this:
Share this comment
Cancel
05-டிச-201913:56:00 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் காய்கறிகள் எல்லாமே அந்தந்த பருவ காலத்தில் காய்பவை , கனமழை காலங்களில் விளைச்சல் குறைந்துவிடும் , அந்த நேரத்தில் குறைவாக பயன்படுத்த வேண்டும் , அல்லது தவிர்த்துவிட வேண்டும் , ஒரு முருங்கை காய் 16 ரூபாய் என்று விற்றபோதே நான் அதன் பயன்பாட்டை தவிர்த்துவிட்டேன் , முருங்கை சாப்பிட்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை , விளைச்சல் வந்து விலை குறைந்தவுடன் வாங்கிக்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
v sampath - CHENNAI,இந்தியா
05-டிச-201913:36:38 IST Report Abuse
v sampath முருங்கை விலை முருங்க மரம் ஏறி விட்டது எட்டாத காயாகி விட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X