பொது செய்தி

இந்தியா

கர்நாடக இடைத்தேர்தல்: ஓட்டுப்பதிவு துவங்கியது

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (1)
Advertisement
கர்நாடகா, சட்டசபை, இடைத்தேர்தல்,

பெங்களூரு: கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று(டிச.,5) காலை 7 முதல் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சிவாஜிநகர், கே.ஆர்.புரம், அத்தானி, கோகாக், ஹரிகேசூர், ராணிபென்னூர், விஜயநகரா, ஹெசகோட்டை, யஷ்வந்தபுரம், மகாலட்சுமி, லேஅவுட், காகவாடா, எல்லாபுரா, கே.ஆர்.பேட்டை, ஹூன்சூர், சிக்பள்ளாபூர், ஆகிய தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.




கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக இருந்த போது 17 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமிஅரசு கவிழ்ந்தது. 105 எம்எல்ஏக்கள் கொண்ட பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. முதல்வராக எடியூரப்பா உள்ளார். இதனையடுத்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர். இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை தொடர்ந்து 15 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. ஐகோர்ட்டில் உள்ள வழக்கு காரணமாக மாஸ்கி மற்றும் ராஜராஜேஸ்வரி தொகுதிகளில் தேர்தல் நடக்கவில்லை.

இந்த தேர்தல், ஆளும் பா.ஜ., காங்கிரஸ் மற்றும் மஜதவுக்கு முக்கியமானதாக உள்ளது. 15 தொகுதிகளிலும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மஜத 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 100 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர்.

கர்நாடக சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 224. 17 பேர் ராஜினாமா காரணமாக, 207 ஆக உள்ளது. இதனால், பெரும்பான்மைக்கு 104 எம்எல்ஏக்கள் ஆதரவு போதுமானது. இடைத்தேர்தலுக்கு பின்னர் உறுப்பினர்களின் எண்ணிக்கை 222 ஆகவும், பெரும்பான்மைக்கு தேவையான பலம் 112 ஆகவும் இருக்கும். எஞ்சிய 2 தொகுதிகளில் தேர்தலுக்கு பின்னர் பெரும்பான்மை பலம் 113 ஆக அதிகரிக்கும். இதனால், இந்த தேர்தலில் குறைந்தது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய அவசியம் பா.ஜ.,வுக்கு உள்ளது. தேர்தலுக்கு பின்னர், காங்கிரசும், மஜதவும் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக துணை முதல்வர் பரமேஸ்வரா கூறியுள்ளார்.

தேர்தல் நடக்கும் இடங்களில், 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு 323 பறக்கும் படையினர், 578 கண்காணிப்பு படையினர் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் வரும் 9 ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
05-டிச-201911:15:50 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை காங்கிரஸ் அமோகமா ஜெயிக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X