18 இந்திய மாலுமிகளுடன் கப்பல் கடத்தல்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (11)
Advertisement
இந்திய மாலுமிகள், நைஜீரியா, கடத்தல்

மும்பை: நைஜீரியாவின் போனி கடற்கரை பகுதி அருகே 18 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.

கடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கப்பல் தலைமை அதிகாரி, மும்பையில் உள்ள மனைவியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் வெளியிடப்படவில்லை. கடத்தப்பட்டவர்கள் எங்கு உள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆயுதங்களுடன் வந்த நைஜீரிய கடற்கொள்ளையர்கள், மாலுமிகள் பயணம் செய்த கப்பலை தாக்கி கடத்தி சென்றனர்.கப்பல் கடத்தல் நடந்த இடம், கடத்தல் எளிதாக நடக்கும் இடங்களில் முதலிடத்தில் உள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டது.

கப்பல் கேப்டனின் தந்தை கூறுகையில், எனது மகன் ஹாங்காங்கை சேர்ந்த ஆங்லோ ஈஸ்டர்ன் நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கேப்டன் பொறுப்பில் உள்ளார். தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பணிக்கு செல்லும் முன்னர் இரவு 10.15 மணியளவில் மனைவியுடன் பேசினார். மறுநாள் காலை அவர் கடத்தப்பட்டதாக, அவர் பணியாற்றிய நிறுவனத்திடம் இருந்து வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த மே மாதம் பணிக்கு சென்றா். 4 மாதங்களில் பணிக்கு திரும்புவதாக இருந்தது. அவரை எதிர்பார்த்து காத்திருந்தோம். அதிக வேலை உள்ளதாகவும், விரைவில் வீடுதிரும்புவேன் எனக்கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.

அதேநேரத்தில், கடத்தப்பட்ட கப்பல், நைஜீரிய கடற்படை கண்காணிப்பில், பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் விவரத்தை அறியவும், அவர்களை மீ்ட்கவும் உதவ வேண்டும் என நைஜீரிய அரசை, இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
05-டிச-201914:25:50 IST Report Abuse
dandy எங்கள் வீர தளபதி சுடலை உத்தரவு கிடைத்ததும் வீரவாள் எடுத்து ..மீட்டு வருவார்
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
05-டிச-201914:23:54 IST Report Abuse
dandy 20 Dollar கொடுத்தால் தென் ஆப்பிரிக்காவில் கொலை கூட செய்வார்கள் தாய்லாந்து நாட்டில் மாத்திரம் 8,000 நைஜீரியர். சிறையில் ஆனால் விசா முடிந்த பின்னரும் திருப்பூரில் வளம் வரும் நைஜீரியர் காலை தொட கூட டாஸ்மாக் நாட்டு போலீஸ் தயங்குகின்றது இந்த அழகில் பல நைஜீரியார்கள்..திருப்பூர் பெண்களுடன் குடும்பம் நடத்துகின்றார்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
05-டிச-201912:03:25 IST Report Abuse
Nallavan Nallavan நைஜீரியர்களின் அன்றாடப் பிழைப்பே நாலாந்தர வேலைகள்தாம் .....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
06-டிச-201907:00:57 IST Report Abuse
Pannadai Pandianmost Nigerians are drug peddlers.....offenders.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X