தஞ்சாவூர்: பழுதடைந்த நிலையில் உள்ள, சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு, தஞ்சாவூர் மாநகராட்சி, 'நோட்டீஸ்' ஒட்டியுள்ளது.
தஞ்சாவூர், மகர்நோன்புசாவடி மிஷன் சாலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. 10 ஆயிரத்து, 500 சதுர அடி பரப்புடைய மனையில் வீடும், காலி இடமும் உள்ளன. தற்போது, இந்த வீட்டில், மனோகரன் என்பவர் குடியிருந்து வருகிறார். பழுதடைந்த நிலையில், இந்த வீட்டை இடிக்க வேண்டும் என, செப்., 17ல், தஞ்சை மாநகராட்சி, 'நோட்டீஸ்' வழங்கியது. ஆனால், கட்டடம் இடிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று, சசிகலா வீட்டின் முகப்புப் பகுதியில், மாநகராட்சி அலுவலர்கள், நோட்டீஸ் ஒட்டினர். அதில், 'இக்கட்டடம், அபாயகரமாக உள்ளதால், இதை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE