துப்பாக்கிச்சூடு: உயிர் தப்பிய இந்திய விமானப்படை தளபதி

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ஹவாய், துப்பாக்கிச்சூடு, விமானப்படை தளபதி, பதூரியா,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அமெரிக்காவின் ஹவாய் கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் , இந்திய விமானப்படை தளபதி பதாரியா உயிர் தப்பினார்.

அமெரிக்காவின் ஹவாய் துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 3 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடற்படை சீருடை அணிந்து வந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்திய உடன் தனது தலையில் சுட்டு கொண்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்தார். சம்பவத்தை தொடர்ந்து கப்பற்கட்டும் தளம் மூடப்பட்டுள்ளது.





இந்த சம்பவம் நடந்த போது, அந்த கப்பற்கட்டும் தளத்தில், இருந்த இந்திய விமானப்படை தளபதி பதாரியா மற்றும் இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில், ஹவாயில் கடற்படைதளத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது, இந்திய விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா அங்கு இருந்தார். துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை. தளபதி உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
05-டிச-201911:04:45 IST Report Abuse
ezhumalaiyaan நல்ல வேளை.கடவுள் காப்பாற்றினார் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X