சீக்கியர் படுகொலையை தடுத்திருக்கலாம்: மன்மோகன்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (52)
Advertisement
1984 riots, Narasimha Rao, IK Gujaral, Manmohan Singh, சீக்கியர் கலவரம், குஜ்ரால், மன்மோகன் சிங்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: முன்னாள் பிரதமர் குஜ்ராலின் பேச்சை கேட்டிருந்தால், 1984 ல் நடந்த சீக்கியர் படுகொலை சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

கடந்த 1997 - 98 ல் பிரதமராக இருந்த ஐகே குஜ்ராலின் 100வது பிறந்த நாள் விழா நேற்று(டிச.,4) டில்லியில் நடந்தது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ''கடந்த 1984 ல் சீக்கியர் கலவரம் நடந்த போது, மாலை நேரத்தில், உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவை, குஜ்ரால் சந்தித்தார். அப்போது, நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. விரைவாக ராணுவத்தை அழைக்க வேண்டியது கட்டாயம் என குஜ்ரால் அறிவுரை கூறினார். அந்த அறிவுரை ஏற்கப்பட்டிருந்தால், 1984 ல் நடந்த படுகொலை சம்பவங்கள் தவிர்த்திருக்க முடியும்.'' இவ்வாறு அவர் பேசினார்.





கடந்த 1984 ல் முன்னாள் பிரதமர் இந்திரா, பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். நரசிம்மராவ், கடந்த 1991 முதல் 96 வரை பிரதமராக இருந்தார். அப்போது, மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மன்மோகன் முக்கிய காரணமாக இருந்தார். அவசர நிலைக்கு பிறகு 1975 - 77 காலகட்டத்தில் மன்மோகன் - குஜ்ரால் இடையிலான நட்பு வலுப்பெற்றது.

இந்த நட்பு தொடர்பாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் மன்மோகன் பேசும் போது, குஜ்ரால் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவசரநிலையை தவறாக கையாண்டது குறித்து சில பிரச்னைகள் அவருக்கு இருந்தன. அப்போது நிதி அமைச்சகத்தில், பொருளாதார ஆலோசகர் பதவியில் நான் இருந்தேன். அது முதல் எங்களுக்கு இடையிலான நட்பு வலுப்பெற துவங்கியது என்றார்.

கடந்த 1975 ம் ஆண்டு அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக குஜ்ரால் பதவி வகித்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மீடியாக்களை சென்சார் செய்ய குஜ்ரால் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டார். 1976 முதல் 1980 வரை அந்த பதவியில் குஜ்ரால் இருந்தார். குஜ்ரால் பிரதமராக இருந்த போது அவர், அண்டை நாடுகளுடன் நெருங்கிய நட்பை கொண்டிருந்தார். 2012 ம் ஆண்டு 92 வயதில் குஜ்ரால் காலமானார்.




இந்த விழாவில் பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசும் போது, 1998 ல் குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது வருத்தத்திற்குரியது. இந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், பா.ஜ., அரசு அமைவதை தடுத்திருக்கலாம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
05-டிச-201916:43:50 IST Report Abuse
Viswam நேரு குடும்பத்தினர் அல்லாதவர் யார் பிரதமராக வந்தாலும் ஜீரணிப்பது காங்கிரஸிற்கு மிகவும் கஷ்டம். அதுவும் நரசிம்ம ராவ் புதிய பொருளாதார கொள்கைகளை கொண்டுவந்து இந்தியாவை மாற்றுவதில் வெற்றியும் பெற்றார் . அவர் இறந்ததும் டெல்லியில் இறுதி சடங்குகளை நடத்தவிடாமல் செய்த பெருமை காங்கிரஸ் அடிவருடிகளான ஷிவ்ராஜ் பாட்டில், குலாம் நபி அசாத் , ஜெகனின் அப்பாவான ராஜசேகர ரெட்டி மற்றும் அகமது பட்டேலையே சாரும் . சோனியா மைனோவிற்கு நேரு குடும்பம் அல்லாத ஒரு பிரதமர் டெல்லியில் முழு மரியாதையுடன் அடக்கம் செய்து நினைவு சின்னம் அமைப்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று. பழுத்த காங்கிரெஸ்க்காரரான அமரர் நரசிம்ம ராவிற்கு அப்போது நேர்ந்த அவலம் மறக்கமுடியாது. அதையும் தூக்கிஅடிப்பதாக இப்போது சீக்கிய ரத்தக்கறை அவரது ஆன்மாவில் மீது ஒரு சீக்கியரான மன்மோகனால் வீசப்படுகிறது. மன்மோகன் மீதிருந்த கொஞ்சம் நஞ்சம் அபிமானமும் பாழ்
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
05-டிச-201915:43:41 IST Report Abuse
Darmavan மௌனசிங் ஒரு துரோகி இவரை அரசியலுக்கு கொண்டு வந்ததே நரசிம்மராவ் தான். அதற்கு நன்றிக்கடன்.ராஜிவ் காந்தியை மறைத்து இப்படி பேசுவது துரோகம் கேவலம் இந்த வயதில் /பதவியில் .
Rate this:
Share this comment
Cancel
Vincent - Madurai,இந்தியா
05-டிச-201915:17:49 IST Report Abuse
Vincent நரசிம்ம ராவ் இந்தியாவின் தலைவிதியை மாற்றி அமைத்தவர். அவருக்கு முன்னால் இந்தியாவில் வேலை வாய்ப்பே இல்லாது இருந்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X