சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கொசுவை கொல்லும் 'குறுக்கு' வலை!

Added : டிச 05, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
கொசுக் கடியிலிருந்து தப்பிக்க உதவும் கொசு வலை, போன நுாற்றாண்டு தொழில் நுட்பம். அதில் புதிய நுட்பத்தை சேர்க்கலாம் என்கின்றனர், பிரிட்டனைச் சேர்ந்த லிவர்பூல் மருத்துவக் கல்லுாரி விஞ்ஞானிகள்.இந்த எளிய தொழில் நுட்பத்தின் மூலம், கொசுக்களை மட்டுமல்ல, இரவில் தொந்தரவு செய்யும் பூச்சிகளையும் கொல்ல முடியும் என்பதை சோதனைகளில் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.கொசு வலைகளை கொசுக்கள்
கொசுவை கொல்லும் 'குறுக்கு' வலை!

கொசுக் கடியிலிருந்து தப்பிக்க உதவும் கொசு வலை, போன நுாற்றாண்டு தொழில் நுட்பம். அதில் புதிய நுட்பத்தை சேர்க்கலாம் என்கின்றனர், பிரிட்டனைச் சேர்ந்த லிவர்பூல் மருத்துவக் கல்லுாரி விஞ்ஞானிகள்.

இந்த எளிய தொழில் நுட்பத்தின் மூலம், கொசுக்களை மட்டுமல்ல, இரவில் தொந்தரவு செய்யும் பூச்சிகளையும் கொல்ல முடியும் என்பதை சோதனைகளில் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொசு வலைகளை கொசுக்கள் எப்படி அணுகு கின்றன என்பதை, 'வீடியோ கேமரா'க்களை வைத்து, பல மணி நேரம் லிவர்பூல் விஞ்ஞானிகள ஆராய்ந்தனர். அதில் தெரிய வந்த ஆச்சரியமான உண்மை என்ன தெரியுமா? உள்ளே உறங்கும் மனிதர்களை கடிக்க, வலையின் பக்கவாட்டில் முட்டி மோதும் கொசுக்கள், வலையின் மேற்புறத்தில் அமர்வதும், பின் அங்கும் இங்கும் பறப்பதும் வழக்கமாக கொண்டிருந்தன.

இதனால், வலையின் மேற்பரப்பில், பூச்சிக்கொல்லி பூசப்பட்ட குறுக்கு வலை ஒன்றை கட்டினால், பெரும்பாலான கொசுக்களை மட்டுமல்ல, பூச்சிகளையும் கொல்லலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த குறுக்கு வலை, மனிதர்களின் கைகள் அடிக்கடி படாத வலையின் மேற்பகுதியில் கட்டியிருப்பதால், பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு பாதிப்பிலிருந்து பயனாளிகள் தப்பிக்கலாம். அதே நேரம், குறுக்கும் மறுக்குமாக பறக்கும் கொசுக்கள், நிச்சயமாக குறுக்கு வலையில் சிக்கி, நச்சு மருந்தால் கொல்லப்படும். பூச்சிகளும் கொல்லப்படுவது போனஸ்!

ஆதலினாலே, விரைவில் கொசு வலை விற்போர், சற்று கூடுதல் கட்டணத்திற்கு, பூச்சிக்கொல்லி மருந்து பூசப்பட்ட குறுக்கு வலையையும் சேர்த்து விற்பர் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
08-டிச-201920:16:03 IST Report Abuse
N Annamalai இன்னும் சில படங்கள் கொடுத்து இருக்கலாம் .ஆச்சர்யம் என்ன வென்றால் சந்திரனுக்கு வண்டி அனுப்ப முடிகிற நாம் கொசுக்களை அளிக்க முடியாமல் உள்ளோம் .
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
07-டிச-201904:51:15 IST Report Abuse
 nicolethomson கொசுக்களை அழிக்க முடியும் இந்த கொசுவலைகளை அழிக்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X