‛நோ டைம் டூ டை' டிரைலர் வெளியீடு: ஆக்ஷனில் அசத்தும் ஜேம்ஸ் பாண்ட்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வெளியாக உள்ள 25வது படமான ‛நோ டைம் டூ டை' டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம்போல் இப்படத்திலும் ஜேம்ஸ் பாண்டின் அதிரடி, ஆக்ஷன் சாகசங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது.






நோ டைம் டூ டை- ட்ரெய்லர்


ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்கும் நடிகரே ஹாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகராக கருதப்படுகிறார். அடுத்து வருகிற ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இந்தப் படம் ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25வது படம்.

‛நோ டைம் டூ டை' என்ற பெயரில் தயாராகி உள்ள இப்படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்குகிறார். ‛கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர்' படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் கிராக் இதிலும் ஜேம்ஸ் பாண்டாக தொடருகிறார். இப்படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியதால் புதிய ஜேம்ஸ்பாண்ட் நடிகரை தேடி வந்தனர். இறுதியில் டேனியலே நடித்தார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தில் படப்பிடிப்பு உள்ள நிலையில் தற்போது இதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.





டேனியல், அதே பிரிட்டிஷ் நாட்டு உளவாளி கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ஹாலிவுட் நடிகர் ராமி மலக் இப்படம் மூலம் முதன்முறையாக வில்லன் பாத்திரம் ஏற்றுள்ளார். வழக்கமான அதிரடி, ஆக்ஷன் மற்றும் ஜேம்ஸ் பாண்டிற்கே உரிய ஸ்டைல் உடன் டிரைலர் வெளியாகி உள்ளது.

மெட்ரோ கோல்டன் மேயர், ஈயான் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், முந்தைய ஜேம்ஸ் பாண்ட் படங்களை விட அதிக பட்ஜெட்டில் தயாராகிறது. அடுத்து ஆண்டு ஏப்ரலில் வெளியிடுகின்றனர். ஆங்கிலம் தவிர்த்து இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.




Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X