பொது செய்தி

இந்தியா

ரெபோ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி முடிவு

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019
Advertisement
RepoInterest, RBI, GDP, ரிசர்வ்வங்கி, ரெபோ, வட்டிவிகிதம், ஜிடிபி

இந்த செய்தியை கேட்க

மும்பை: குறுகிய கால வங்கி கடன்களுக்கான ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், குறுகிய கால வங்கி கடன்களுக்கான ரெபோ வட்டி விகிதம் தொடர்பாக ஆலோனை நடந்தது. தொடர்ந்து 5 முறை ரெபோ வட்டிவிகிதத்தை குறைத்த நிலையில் இம்முறை மாற்றம் செய்யவில்லை என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் 1.35 சதவீதம் அளவிற்கு வட்டிவிகிதத்தை குறைந்த ரெபோ வட்டி விகிதம் தற்போதுள்ள 5.15 % ஆகவும், ரிவர்ஸ் ரெபோ 4.90% சதவீதமாகவும் இருக்கும்.






அதேபோல், 2019 - 20ம் ஆண்டின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (ஜிடிபி) கணிப்பு 6.1 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில், இரண்டாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, திட்டமிட்டதை விட கணிசமாக குறைவாக இருந்தது, என கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X