வெங்காயம் சாப்பிடாத நிர்மலா: சிதம்பரம் காட்டம்| Dinamalar

வெங்காயம் சாப்பிடாத நிர்மலா: சிதம்பரம் காட்டம்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (101)
Share
சிதம்பரம், ப.சிதம்பரம், பொருளாதாரம், மந்தநிலை, மத்திய அரசு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: '' வெங்காயம் சாப்பிடவில்லை எனக் கூறும் நிதியமைச்சர் நிர்மலா என்ன சாப்பிடுகிறார்? பட்டர் புரூட் (அவகோடா) சாப்பிடுகிறாரா? என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து , முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் திஹார் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். தொடர்ந்து இன்று (டிச.,5) பார்லி நடவடிக்கைகளில் பங்கேற்றார். தொடர்ந்து வெங்காய விலை உயர்வுக்கு எதிராக பார்லி வளாகத்தில் போராட்டம் நடந்தது. இதில் சிதம்பரமும் பங்கேற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வெங்காயம் சாப்பிடவில்லை என நிதியமைச்சர் நிர்மலா கூறுகிறார். அப்படியென்றால், அவர் என்ன சாப்பிடுகிறார்? அவர் பட்டர்புரூட் சாப்பிடுகிறாரா? என்றார்.


பொருளாதார நிலை


பின்னர் சிதம்பரம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 106 நாட்களுக்கு பிறகு நான் உங்களை சந்திக்கிறேன். 75 லட்சம் காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. நமது சுதந்திரத்திற்காக போராட வேண்டியுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நான் கருத்து கூறுவது இல்லை. அமைச்சராக இருந்த போது எனது செயல்பாடுகளில் எந்த குற்றமும் இல்லை.

பொருளாதாரத்திற்கு வழி தெரியாததால், அரசுதவறான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் அலுவலகம் தவறான முடிவை எடுத்து வருகிறது. நாட்டின் பொருளாதார நிலை மோசமாக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை பா.ஜ., அரசால் யூகிக்க முடியவில்லை. பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி வரி பயங்கரவாதம் ஆகியவைகளால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 ல் இருந்து 5.5 ஆக குறைந்துள்ளது. பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாத அரசாக மாறியுள்ளது.பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரம் குறித்து பேசுவது இல்லை. நல்ல நாள் வரும் என பாஜ., வாக்குறுதி இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news



உற்பத்தி, சிறுகுறு தொழில், கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்கள் கடன் பெறுவதும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கிராமப்புறங்களில் வாங்கும் திறன் குறைந்துவிட்டது. பொருட்களின் மொத்த விலையும் உயர்ந்துள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது வருவாய் ஈட்டும் சக்தி குறைவு. மின் தேவை குறைவு காரணமாக மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.அரசின் தெளிவற்ற நிலையே பொருளாதார மந்தநிலைக்கு காரணம். பொருளாதார மந்தநிலையில் இருந்து இந்த அரசால் மீள முடியாது.பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டியதே நமது அதிர்ஷ்டம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X