பாலியல் புகார்களை மறைத்த அமெரிக்க பிஷப் பதவி விலகினார்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (10)
Advertisement
அமெரிக்க பிஷப்,  பதவி விலகல், US bishop, resign, abuse,  accusations

இந்த செய்தியை கேட்க

வாடிகன்: பாலியல் வழக்கை கையாண்ட விதத்திற்காக விமர்சனத்திற்கு உள்ளான அமெரிக்காவை சேர்ந்த பிஷப் பதவி விகுவதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்கின் பபலோ பகுதியில் உள்ள தேவாலயத்தின் பிஷப் ரிச்சர்ட் ஜே மலோன். இந்த தேவாயம் மீது 200க்கும்மேற்பட்ட புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக எப்பிஐ விசாரணை நடத்தி வருகிறது.

பதவி விலகல் தொடர்பாக பிஷப் வெளியிட்ட அறிக்கையில், வேண்டுதல் மற்றும் ஆலோசனைக்கு பிறகு, தேவாலயத்தை புதிய பிஷப்பால் நிர்வாகிக்க முடியும் என்ற முடிவுக்கு தான் வந்துள்ளேன். கடந்த சிலநாட்களாக, எங்கள் மீது பல புகார்கள் வந்துள்ளது அனைவருக்கும் தெரியும். இதற்கு எனது சொந்த முடிவுகளே காரணம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், பல ஆண்டுகளாக, உலகளவில் சிறார்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக புகார்களை, தேவாய உறுப்பினர்கள் கையாளும் முறை தோல்வியடைந்துவிட்டதை மக்களின் கொந்தளிப்பு காட்டுகிறது எனதெரிவித்துள்ளார். பிஷப்கள் 75 வயதிற்கு மேல் மட்டுமே ஓய்வு குறித்து அறிவிக்க முடியும். ஆனால் அதற்கு முன்னதாக அவர் ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.
புகார்களை மூடி மறைப்பதாக பிஷப் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சில தகவல்கள் கசிந்தன. அதில், குற்றச்சாட்டுகளின் தன்மையை குறைக்கும் வகையில், அவர் தேவாலய வழக்கறிஞர்களுடன் பிஷப் பேசிய தகவல் வெளியானது முக்கியமானதாக இருந்தது. பாலியல் புகார் எனது பிஷப் பதவிக்கு ஆபத்தாக முடியும் என அவர் பேசிய ரகசிய ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு பாதிரியாரை பதவி நீக்கம் செய்ய அவர் காட்டிய தயக்கமும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது

கடந்த 2018 வரை, இந்த மறைமாவட்டம் மீது எந்த புகாரும் கூறப்படவில்லை. இதற்கு பின்னரே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. கடந்த மார்ச் மாதம், 42 பாதிரியார்கள் மீது பாலியல் புகாரை கூறப்பட்ட ஆவணங்களை பிஷப் மலோன் வெளியிட்டார். ஆனால், அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர், அந்த ஆவணத்தில் 100 பேரின் பெயர்கள் இருந்ததாக கூறினார்.
இந்நிலையில், அந்த பிஷப் பதவி விலக வேண்டும் என 86 சதவீத பாதிரியார்கள் கருத்து தெரிவித்தனர். அவர் பதவியில் தொடர 3 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர் அவர் பதவியில் இருந்து விலக 12 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனுவை தயாரித்தனர்.

இது குறித்து மலோன் வெளியிட்ட அறிக்கையில், பபலோ மறைமாவட்ட மக்களின் ஆன்மிக நலன் கருதி, ஒரு புதிய பிஷப் சிறப்பாக செயல்பட முடியும் என்ற முடிவுக்கு நீண்ட பிரார்த்தனை மற்றும் ஆலோசனைக்கு பிறகு வந்தேன். தற்போது தேவைப்படம்நல்லிணக்கம், புதுப்பித்தல் ஆகியவை அவர்களால் கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளார். பிஷப் மலோன் பதவி விலகியதை தொடர்ந்து, அந்த பதவிக்கு, தற்காலிகமாக அல்பானி பிஷப் எட்வர்ட் பி ஷர்பென்பெர்ஜர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
06-டிச-201900:52:57 IST Report Abuse
Kunjumani சுந்தர் பிச்சையின் சதி இது என்று நம் கழக உடன்பிறப்புகளுக்கு தெரியாதா? ஆர்ப்பட்ட செய்ய இறந்தும் சமாதியில் முரசொலி படிக்கும் நமது தானை தலைவன் ஆணையிட்டுவிட்டான், உடன்பிறப்புகளே கிளம்புங்கள் நம் சிறுபான்மையினர் நலன் காக்க.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
05-டிச-201920:32:54 IST Report Abuse
தமிழ்வேள் உணவுக்கட்டுப்பாடு ஒழுக்க விதிகள் என்று எதுவுமே இன்றி ஒரு விலங்குத்தனமான வாழ்வை புனிதம் என்று கருதி தானும் கெட்டு சமூகத்தையும் கெடுக்கும் ஆட்கள் இந்த பாதிரி பிஷப் போன்றோர் திருச்சபைகள் ஒழுக்கம் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்பவை ......
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
05-டிச-201918:56:51 IST Report Abuse
Cheran Perumal கேரளா பிஷப்பின் பாலியல் வன்கொடுமை செயலை வாட்டிகன் ஆதரிக்கிறது. இங்குள்ள கம்யூனிச அரசாங்கமும் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்டவரை துன்புறுத்துகிறார்கள்.இந்தியாவில் எந்த அளவு மத அரசியல் நடக்கிறது என்பதற்கு இவைகளே சாட்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X